Author: admin

காவலாளிக்கான இருப்பிடம்

எமது 2003 உ.த பழைய மாணவன் திரு.இ நிசாந்தன் அவர்களால் எமது சங்கத்தின் ஊடாக பாடசாலைக்கு வழங்கப்பட்ட காவலாளிக்கான இருப்பிடம்.

5 மாத செயற்பாட்டறிக்கை

யாழ் இந்து பழைய மாணவர்சங்க ஆட்சிக்குழு பதவியேற்று 5 மாத காலத்தினுள் படசாலையில் அத்தியவசிய மற்றும் அவசிய தேவைகள் என இனங்காணப்பட்ட பணிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. பாடசாலை மாணவர்களை தவறான பாதையில் இட்டுச்செல்லும் போதைவஸ்து பழக்கங்களை ஏற்படுத்த வருவோர்களை கண்காணிக்க 92 ஆம் ஆண்டு ஐக்கிய ராட்சிய பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் ஐக்கிய ராட்சிய பழைய மாணவர் சங்கத்தினுடாக கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன  பாடசாலைக்கென இரவு பகல் நேர காவலாளியை ஏற்பாடு செய்து அதற்கான கொடுப்பனவை…
Read more

விசேட பொதுக்கூட்டம்

எமது சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது  பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் -செயலாளர்

விடுதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ் இந்து விடுதி பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் விடுதி புனரமைப்பு பணிகள் இன்றுஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கமெரா

AL 92 (UK )பழைய மாணவர்களின்   நிதி பங்களிப்பில் UK  பழைய மாணவர் சங்கத்தின்  அனுசரணையில் யாழ்ப்பாணம் பழையமாணவர் சங்கத்தினால் பாடசா்லை வளாகத்தில் கண்காணிப்பு கமெரா  இன்று பொருத்தப்பட்டது.

விடுதி மாணவர்களுக்கு மெத்தைகள் அன்பளிப்பு

விடுதி பழைய மாணவர்களின் பங்களிப்பில் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு மெத்தைகள் இன்று கையளிக்கப்பட்டது. பாடசாலையின் அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த மெத்தைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

விற்பனை கூடம் ஆரம்பம்

எமது யாழ்பாண பழைய மாணவர் சங்கம் மாணவர்களின் நலன் கருதி கல்லுாரி ஞான வைரவர் ஆலயத்தின் அருகில் உள்ள பழைய மாணவர் சங்க அலுவலகத்தினை விற்பனை கூடமாக மாற்றியுள்ளது. இங்கே மாணவர்கள் தமக்கு வேண்டிய கற்றல் உபகரணங்களினையும் இதர சேவைகளயும் நியாய விலையில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கூடத்தின் ஊடாக பெறப்படும் வருமானம் சங்கத்தின் ஊடாக பாடசாலை மேம்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். சங்கத்தின் நிதி மேம்பாட்டுக்குழு இதனை முகாமை செய்கின்றது. விரைவில் கூடுதலான சேவைகளையும் கற்றல் உபகரணங்களையும் அங்கு…
Read more

புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கட்டடத்துக்கான சாந்தி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டடத்திற்கான சாந்தி செய்யும் நிகழ்வு 09.03.2015 இரவு 7.30 மணிக்கு பிரதி அதிபர் சதா.நிமலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்