Author: admin

வருடாந்த பொதுக் கூட்டம் 2023

  பொருளாளர் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பம் Click Here

நிர்வாகக் குழுத் தெரிவு 2023 -2024

நிர்வாகக் குழுத் தெரிவிற்கான (2023 -2024 ) வேட்பு மனு தேர்தல் குழுவினால் கோரப்பட்டுள்ளது. அது தெடர்பான விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.   விண்ணப்பபடிவத்தினை இங்கே தரவிறக்கவும் – தரவிறக்குக    

முத்தமிழ் மாலை கலை நிகழ்வு 2022

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கம் வருடாந்தம் நடாத்தி வருகின்ற முத்தமிழ் மாலை கலை நிகழ்வு இவ்வருடம் டிசம்பர் மாதம் 10 திகதி பிரமாண்டமாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் தலைமையிலான பட்டிமன்றம் , த.ஜெயசீலன் தலைமையிலான கவியரங்கம் , ஆசிரியர் விமலநாதன் நெறியாள்கையில் இசை நாடகம் மற்றும் ஜெகதீஸ் அருணா இசையில் இந்துவின் இசைக்குழுவினர் பங்குபெறும் இசைநிகழ்வும் இடம்பெற உள்ளது. நுழைவுச்சீட்டுக்களுக்கு முன்பதிவு 

இணைய வழி கருத்ததங்கு 02

இன்றைய காலத்தை பொறுத்த வரை வரி நடைமுறைகள் ஒரு பேசு பொருளாகியுள்ளது. ஆனால் அது தொடர்பான தெளிவான தகவல்கள் பலரிடம் இல்லை.இந்த நிலையில் வரி நடை முறைகள் குறித்து கலாநிதி ரமேஸ் அவர்களால் வழங்கப்பட்ட கருத்துரை 07.11.2022 நடைபெற்றது.

பழையமாணவர் சங்கத்தின் விற்பனைக்கூடம்

பழையமாணவர் சங்கத்தின் விற்பனைக்கூடம் , சங்கத்தின் பழைய அலுவலக அறையில் இன்று மீளவும் விஜய தசமி தினம் (5.10.2022) ஆரம்பிக்கப்பட்டது . பழைய மாணவர்களுக்கான உடைகள் கல்லூரிச்சின்னங்களுடனான நினைவுப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் அனைத்துவித கழுத்துப்பட்டிகள் ,காலணி என அனைத்தும் விரைவில் பெற வழி செய்யப்படும். பாடசாலை உபகரணங்கள் ஆரம்பத்தில் பொறிக்கப்பட்ட பழைய விலைகளில் மாணவர்கள் பெறலாம் இலாப நோக்கமின்றி செயற்படும் இந்நிலையம் மூலம் நியாய விலையில் பொருட்களை பெறலாம் இந்த நிலையம் மூலம்…
Read more

மாதாந்த இணைய வழி கலந்துரையாடல் 01

சங்கத்தின் ஏற்பாட்டில் மாதாந்த இணைய வழி கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது . அதன் தொடக்கமாக  பாடசாலை மாணவர்கள் மத்தியில் நிலவும் போதைப்பொருள் பாவைனை தொடர்பிலான விழிப்புணர்வு கருத்துரை வைத்திய கலாநிதி சிவதாஸ் அவர்களால் 1.10.2022 அன்று வழங்கப்பட்டது

குருதிக்கொடை முகாம் 2022!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “ஒரு துளி உயிர் தரும்” – குருதிக்கொடை முகாம் பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் ஆதரவுடன் 24 செப்டெம்பர், 2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது நிகழ்வில் 51 பேர் குருதிக்கொடை வழங்கினர் .

மாணவர்களுக்கான நீச்சல் பயிற்சி

மாணவர்கள் மத்தியில் நீச்சல் பயிற்சியில் ஆர்வத்தை ஏற்படுத்த எமது சங்கத்தினால் மாணவர்களுக்கான நீச்சல் பயிற்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரியில் நீச்சல் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாணவர்களுக்கு சங்கத்தின் ஏற்பாட்டில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.