Author: admin

Covid-19 Relief Project – Stage -03

Today 200 packs of essential goods provided by JHC OBA with the support of DMC & following sponsors 1-Balasingham Shanthanigethan (A/L 89 Batch- JHC) Switzerland 🇨🇭- 100,000 2-JHC 89 A/L Batch – Australia – Rs 261,726.00. With the coordination of our President Prof.Kannathaasan

Covid-19 relief Project- Stage 2

JHC OBA Provides essential goods to 113 Families in Muthur,Trincomalee(Nallur). Sponsored by Mr.S.Hariharan (89 Batch- Colombo). Medical students working in the field to packing and distribution with the coordination of President Prof.Kannathasan. Thank you very much to all.

JHC OBA provides essential goods in COVID 19

JHC OBA provides essential goods in this critical situation to some areas identified by DMC. 350000 SLR sponsored by 89 A/L Batch – Canada Old Boys. Project was inaugurated by Principal, President, Secretary & Asst.Secretary of OBA, 89 batch representative and Asst. Commissioner of DMC.

விடுதி மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் பழைய மாணவர் திரு முகுந்தன் அவர்களின் அனுசரணையுடன் விடுதி மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவும் இரண்டாவது விருந்து வருடாந்த ஒன்றுகூடலும் 07.03.2020 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

போட்டோபிரதி இயந்திரம் அன்பளிப்பு

யாழ் இந்துக் கல்லூரியின் 89ம் அணியைச் சேர்ந்த திரு. முகுந்தன் (கனடா) அவர்களினால் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டிற்காக சகல வசதிகள் கொண்ட போட்டோபிரதி இயந்திரம் ஒன்று 25.02.2020 இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில்   பழைய மாணவர் சங்க தலைவர், செயலாளர், பாடசாலை பிரதி அதிபர் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேற்படி அன்பளிப்பினை வழங்கியமைக்காக திரு. முகுந்தன் அவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம் மேற்படி போட்டோபிரதி இயந்திரம்…
Read more

புதிய நிர்வாக சபைக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்

வேட்புமனு மீளப்பெறுதல்களின் பின்  வெளியான பட்டிலின்படி உபதலைவர்கள் 5 பேருக்கும் நிர்வாக சபை உறுப்பினர்கள் 17பேருக்கும் தேர்தல் இடம்பெறும்.ஏனைய பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு இடம்பெறுகின்றது

யாழ் இந்து மாணவர் விடுதி திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட யாழ் இந்து மாணவர் விடுதி 03.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது நிகழ்வில் கல்லூரி விடுதி மாணவர்கள் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,விடுதி அத்தியட்சகர், விடுதி மேற்பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  பழைய மாணவர் சங்க வேண்டுகோளுக்கமைவாக முன்னாள் அமைச்சர் கௌரவ மனோகணேசனின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி திருத்த வேலைகள் இடம்பெற்றது.    

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம் தேர்தல் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை மீளப்பெறவிரும்பின் 04.02.2020 பி.ப 1.30 மணி வரை தேர்தல் குழுவிற்கு அறிவித்து மீளப்பெற்றுக் கொள்ளலாம். போட்டி உள்ள இடங்களுக்கான தேர்தல் 9 ம்திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் நடைபெறும்

சங்கத்தின் நிதி உதவியுடன் 16 CCTV கமெராக்கள் பொருத்தப்பட்டது.

பாடசாலையின் குமாரசுவாமி மண்டப பகுதியிற்கு யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தின் நிதி உதவியுடன் 16 CCTV கமெராக்கள் பொருத்தப்பட்டது.

வருடாந்த பொதுக்கூட்ட அறிவிப்பு

வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் – 09/02/2020 ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் . நிர்வாக சபைத்தெரிவுக்கான வேட்பு மனுக்கோரல் ஏற்கனவே  தேர்தல் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது -விண்ணப்ப  முடிவுத்திகதி 28.01.2020 பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் அறிவிப்பு 2020