JHC OBA Covid-19 relief Project- Stage 5
Essential goods to 104 (130,000/=) Families in Sampur-Trincomalee Provided with financial support of JHC A/L 91 Batch with the coordination of Dr.Dheenathayalan & Previous President Mr.Thaneshkumar. Check issued by Treasurer Mr.Arunagirinathan to Mr.Thayakaran(JHC Old Boy- Manager,HNB, Trinco) to processing.
Acknowledgement-
செல்லக்குட்டி அருணோதயம்.
சம்பூர்
30.04.2020
தலைவர்
யாழ்இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்
யாழ்ப்பாணம்.
உதவிக்கரம் புரிந்தமைக்கு எமது அகம் நிறை நன்றிகள்.
இலங்கைத்திருநாட்டில் கல்விப்பெறுபேறுகளால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிநீண்டகாலமாக முன்னிலை வகித்து வருகின்றது. மேலும் இக்கல்லூரியின் பழைய மாணவர்களின் பல்வேறு சேவைகள் பிரதேச எல்லைகள் கடந்தவைகளாக காணப்படுகின்றன. இதற்கமைவாக எமது கோரிக்கையை கருத்தில் கொண்டு யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது துரிதமாக செயற்பட்டது.அத்தோடு இக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்விபயின்ற 91ம் ஆண்டு மாணவ அணியினர் அனுசரணை வழங்கியிருந்தனர்.கொரோனா அனர்த்த கால இவ் நற்பணியால் எமது சம்பூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் நூற்றிநான்கு குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர். அத்துடன் எமது சம்பூரணம் (முன்னைய பெயர் ) குளக்கோட்ட மன்னனால் உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த கிராமமாகும்.2006 யுத்த இடப்பெயர்வின் போது சொல்லொனா துயரங்களை அனுபவித்தனர் எமது கிராமத்தில் அனல் மின் நிலையத்தினை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.எங்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டம் மற்றும் மக்களின் பல போராட்டங்கள் பல்வேறு இதன்காரணமாக 10 வருடங்களின் பின்பு எமது கிராமத்தை மீட்டெடுத்தோம் அத்துடன் கோணேசர் பெருமானை காவல் காக்க வந்த எங்கள் காளித்தாயாரும் காட்டுத்தென்னை மரத்தின்கீழ் அமர்ந்திருக்கின்றார் பல பெருமைகள் கூறும் எமது தேசத்திற்கு தங்களுடைய பரந்த கரங்களால் உதவிக்கரம் மூலம் அணைத்திருக்கின்றீர்கள்.இவ் உதவிகள் பலருக்கு முதலுதவியாகவே இருந்தது என்பதை செவி வழியாக கேட்டேன். இவ் உதவிகளை என்றும் மறவோம் எமது உறவுகள் சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ்வண்ணம்
என்றும் நற் பணியில்
செ.செந்தூரன்