5 மாத செயற்பாட்டறிக்கை
யாழ் இந்து பழைய மாணவர்சங்க ஆட்சிக்குழு பதவியேற்று 5 மாத காலத்தினுள் படசாலையில் அத்தியவசிய மற்றும் அவசிய தேவைகள் என இனங்காணப்பட்ட பணிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது.
- பாடசாலை மாணவர்களை தவறான பாதையில் இட்டுச்செல்லும் போதைவஸ்து பழக்கங்களை ஏற்படுத்த வருவோர்களை கண்காணிக்க 92 ஆம் ஆண்டு ஐக்கிய ராட்சிய பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் ஐக்கிய ராட்சிய பழைய மாணவர் சங்கத்தினுடாக கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன
- பாடசாலைக்கென இரவு பகல் நேர காவலாளியை ஏற்பாடு செய்து அதற்கான கொடுப்பனவை எமது சங்கமும் கொழும்பு பழைய மாணவர் சங்கமும் பொறுப்பேற்றுள்ளது.
- விடுதி வாழ் பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் விடுதி சகல மாணவர்களுக்கான மெத்தைகள் வழங்கப்பட்டுள்ளன.
- விடுதி வாழ் பழைய பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் விடுதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- பாடசாலை காவலாளிக்கான இருப்பிடம் (கூடாரம்) 2003 ஆண்டு பழைய மாணவன் திரு. இ.நிசாந்தனால் வழங்கப்பட்டுள்ளது.
- பாடசாலை மாணவர்கள் அவசியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான விசேட விற்பனை கூடம் எமது சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
- மாணவ முதல்வர்களுக்கான விசேட பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
- படசாலை ஒழுக்காற்று குழுவிற்கான விசேட பயிற்சி உள நல வைத்திய நிபுணர் கணேசனால் நடாத்தப்பட்டது.
- திட்டமிடலின் படி கலை நிகழ்வு யூலை 11 அந் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கியமற்ற குளிர்பான வகைகள் மற்றும் உணவு வகைகளை நிறுத்தி அதற்கான மாற்றீடுகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
- பின்வரும் திட்டங்களுக்கான நிதி மூலங்கள் கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- சி கட்டடத்தொகுதிகளிலுள்ள வகுப்பறைகளின் புனரமைப்பு ஐக்கிய ராட்சிய பழைய மாணவர் திரு ஜெயப்பிராஸின் பங்களிப்பில் ஆரம்பிக்கப்டவுள்ளது.
- டி கட்டடதொகுதிகளிலுள்ள வகுப்பறைகளின் புனரமைப்பு கனடா பழைய மாணவர் சங்க பங்களிப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
- மெல்போர்ன் பழைய மாணவர் சங்க பங்களிப்பில் புதிய மலசல கூட கட்டடத் தொகுதி நிறுவப்படவுள்ளது
பாடசாலை மாணவரக்ளுக்கான 100 புதிய மேசை கதிரைகள் சிட்னி பழைய மாணவர் சங்க பங்களிப்பில வழங்கப்படவுள்ளது. - சிட்னி பழைய மாணவர் சங்க பங்களிப்பில் நவீனமயமாக்கப்பட்ட புதிய கட்டத்தொகுதியில் ஆய்வுகூடம் மாற்றியமைக்கப்படவுள்ளது.
- மைதான புனரமைப்பு பணிகள் கனடா பழைய மாணவர் சங்க பங்களிப்பில் விரைவாக ஆரம்பிக்கப்டவுள்ளது.
- கல்லுாரி உத்தியோக பூர்வ இணையத்தளப்பதிவுக்கான(jhc.lk) செலவுகள் வழமை போல தொடர்கின்றது.தளப்பராமரிப்பு வேலைகள் கல்லுாரியால் மேறகொள்ளப்படுகின்றது
எமது பாடசாலை என்ற ஓரே பொது நோக்கிற்காக எம்முடன் இணந்து சகல திட்டங்களிலும் பங்களிப்பு செய்யும் பழைய மாணவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்து எம்முடன் இணைந்து பாடசாலை அபிவிருத்திக்கான பங்களிப்புச்செய்து தமிழரின் தலை நிமிர்கழகத்தை பாதுகாப்போம்.
எவ்விடமேகினும் எத்துயர் நேரினும்
எம்மன்னை நின்னலம் மறவோம்
என்றுமே என்றுமே என்றும்
இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு நன்றே!
செயலாளர்
Dr.சிறீகரன்