News & Events

இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு: ஒட்டிசுட்டான்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினால் இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02.11.2015) ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. ஓட்டிசுட்டான் பிரதேச செயலரும் எமது பழையமாணவனுமாகிய திரு.குருபரனும் வன்னிப்பிராந்திய சங்கத்தின் பொருளாளர் திரு.அகிலனும் புத்தகங்களை அதிபர் திரு.கருணாகரன் அவர்களிடம் கையளித்தனர்.

முன்னாள் தலைவர் கப்டன் என்.சோமசுந்தரம் காலமானார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவரும், சைவ பரிபாலன சபை முன்னாள் தலைவருமான கப்டன் என்.சோமசுந்தரம் (வயது 83) 26.10.2015 திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் காலமானார். இவரின் பூதவுடல் மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  புதன்கிழமை(28.10.2015)  இறுதிக்கிரியைகள் நடைபெற்றது (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், விளையாட்டுத் துறைப் பொறுப் பாசிரியரும், விடுதி அதிபரும், மாணவர் தேசிய படையணி மற்றும் பாண்ட்…
Read more

பழைய மாணவர் சங்க சமூகப்பணித்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் விஜய தசமி நாளான இன்று தனது சமூகப்பணித்திட்டத்தை கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் ஆரம்பித்தது.கிளிநொச்சி இந்துக்கல்லூரி நூலகத்திற்கு க.பொ.த (உ/த) கா.பொ.த (ச/த) பரீட்சை வினாத்தாள் புத்தகங்கள் உள்ளடங்கலாக ஒரு தொகுதி புத்தகங்களினை வழங்கினர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட நாவன்மைப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்தனர்.கல்லூரி மாணவர்களிற்கான சதுரங்க பயிற்சி வைத்திய கலாநிதி ஜெயராஜ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கும் எமது கல்லூரிக்குமிடையான பட்டிமன்றம் இடம்பெற்றது. இதில் எமது கல்லூரி…
Read more

Children day Program in College

Jaffna OBA Committee Member Mr.P.Gouthaman Participated as Cheif Guest in Children day Program in College Yesterday

ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர் தினத்தன்று குமாரசுவாமி மண்ணடபத்தில் நடைபெற்ற விழாவில் பழையமாணவர்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆசரியர்களை கெரவித்தனர். யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் ஆசிரியர்களை கௌரவிக்க வழங்கப்பட்ட நினைவுச் சின்னம்.இது 

பிரமாண்டமான இரத்ததானம்

யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமான இரத்ததான நிகழ்வில் 206 இரத்தக் கொடையாளிகளாக கலந்து கொண்டனர். ஏற்கனவே மார்ச் மாதத்தில் 94 போர் கலந்து கொண்ட இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. 125 ஆவது நிகழ்வுகளை முன்னிட்டு 300 பைந் இரத்தம் யாழ் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது

Resolution of JHC OBA on 125th Year Final Events

Resolution of JHC OBA on 125th Year Events on 23, 24, 25 and 27th September 2015 Click here to view the Resolution [13.09.2015]

கல்லூரி 125 ஆவது ஆண்டு நிறைவு விழா விசேட செயலணியின் கூட்ட முடிவுகள்

யாழ் இந்துவின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளுக்கான விசேட செயலணி கலந்துரையாடல் இன்று (4.8.2015) மாலை கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. 1 கல்லூரி அதிபரே பிரதான ஒருங்கிணைப்பாளராக செயற்படுவார் 2 யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கம் மற்றய பழைய மாணவர் சங்கங்களுடன் இணைந்து விழாவை சிறப்புற ஒழுங்கமைப்பு செய்யும் 3 விழா சிறப்புற பழைய மாணவர்கள் அனைவரையும் கருத்து பேதமின்றி ஒத்துழைக்க வழிசமைத்தல் இதன்படி  125 ஆவது…
Read more

விடுதி குளியலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு

விடுதி மாணவர்களுக்கான குளியலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன

விடுதி சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு

விடுதி மாணவர்களுக்கான சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தததையடுத்து இன்று(22.7.2015) பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன