விடுதி சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு
விடுதி மாணவர்களுக்கான சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தததையடுத்து இன்று(22.7.2015) பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன
விடுதி மாணவர்களுக்கான சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தததையடுத்து இன்று(22.7.2015) பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன
விடுதி புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் 13.07.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப்பயிற்சிப்பட்டறையில் யாழ் இந்து விடுதி மாணவர்களுக்கான ஒழுக்கத்திற்குப் பொறுப்பாசிரியராகவிருந்த சந்தியாப்பிள்ளை ஆசிரியர் கலந்து கொண்டார். தன்னுடைய காலத்தில் விடுதி மாணவர்களின் ஒழுக்கம் எவ்வாறு பேணப்பட்டதென்பதையும் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார். முன்னாள் விடுதி மாணவனும் பழைய மாணவர் சங்க செயலாளருமான வைத்திய நிபுணர் சிறீகரன் போசாக்கு உணவுகள் பற்றியும் உடற்பயிற்சியின் அவசியம் பற்றியும் விளக்கவுரையளித்தார். முன்னாள்…
Read more
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் 125 வது ஆண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம் முற்று முழுதாக உள்ளுர் கலைஞர்களினை கொண்டு பிரமாண்டமாக நடாத்திய கட்டணத்துடன் கூடிய முத்தமிழ் மாலை 2015 நிகழ்வு பார்வையாளரினை பெரிதும் கவர்ந்ததுடன் அவர்கள் கலைஞர்களையும் பாராட்டிச்சென்றனர். 11.7.2015 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கல்லுாரியின் புதிதாக அமைந்த சபாலிங்கம் கலையரங்கில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 1.கோபிதாசின் வயலின் இசை 2.பிரியதர்ஸினி வாகீசனின் நெறியாள்கையில் நர்த்தன…
Read more
எமது 2003 உ.த பழைய மாணவன் திரு.இ நிசாந்தன் அவர்களால் எமது சங்கத்தின் ஊடாக பாடசாலைக்கு வழங்கப்பட்ட காவலாளிக்கான இருப்பிடம்.
யாழ் இந்து பழைய மாணவர்சங்க ஆட்சிக்குழு பதவியேற்று 5 மாத காலத்தினுள் படசாலையில் அத்தியவசிய மற்றும் அவசிய தேவைகள் என இனங்காணப்பட்ட பணிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. பாடசாலை மாணவர்களை தவறான பாதையில் இட்டுச்செல்லும் போதைவஸ்து பழக்கங்களை ஏற்படுத்த வருவோர்களை கண்காணிக்க 92 ஆம் ஆண்டு ஐக்கிய ராட்சிய பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் ஐக்கிய ராட்சிய பழைய மாணவர் சங்கத்தினுடாக கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன பாடசாலைக்கென இரவு பகல் நேர காவலாளியை ஏற்பாடு செய்து அதற்கான கொடுப்பனவை…
Read more
எமது சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் -செயலாளர்
யாழ் இந்து விடுதி பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் விடுதி புனரமைப்பு பணிகள் இன்றுஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
AL 92 (UK )பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் UK பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் யாழ்ப்பாணம் பழையமாணவர் சங்கத்தினால் பாடசா்லை வளாகத்தில் கண்காணிப்பு கமெரா இன்று பொருத்தப்பட்டது.